TamilsGuide

மணிகண்டா திரைப்படத்தின் லிரிக்கல் வீடியோ வெளியீடு

'மணிகண்டா' திரைப்படத்தின் 'எந்த மலை சேவித்தாலும்' பாடலின் லிரிக்கல் வீடியோவானது வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் (Vishnu Sasi Shankar) இயக்கத்தில் வைபவ் நடித்துள்ள இத்திரைப்படத்தின் பாடல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

ஐயப்ப பக்தி மற்றும் ஆன்மிகப் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகும் படம். நவம்பர் 2026-ல் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றுள்ளன, மேலும் கார்த்திகை மாதத்தில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.இந்த நிலையில் படத்தின் லிரிக்கல் பாடல் வெளியாகியுள்ளது.

எந்த மலை சேவித்தாலும் என்ற லிரிக்கல் பாடலானது வெளியிடப்பட்டுள்ளது. பிரேம்ஜி அமரன் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார்.பிரபல பக்திப் பாடகர் வீரமணிதாசன் இப்பாடலைப் பாடியுள்ளார். இந்த நிலையில் பாடலின் லிரிக்கல் வீடியோவானது யூடியூப் தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

டான்ட்ரா பிலிம்ஸ் (Tantra Films) தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன், அரவிந்த் ஆகாஷ், ஆடுகளம் நரேன் ஆகியோருடன் வெங்கட் பிரபு, ரவி மோகன், மிர்ச்சி சிவா உள்ளிட்ட பலரும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்
 

Leave a comment

Comment