TamilsGuide

தமிழர் பகுதி கடற்கரையில் இரு இளைஞர்களின் தகாத செயல் - அதிகாலையில் அம்பலமான விடயம்

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, போதைப்பொருளுடன் 21 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (19) அதிகாலை நிந்தவூர் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கடற்கரைப் பகுதியில் விசேட கண்காணிப்பு மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இரு இளைஞர்களை வழிமறித்துப் பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, அவர்களிடமிருந்து சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஷ் சேனரத்னவின் பணிப்புரையிலும், அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிலும், பொலிஸ் அதிகாரிகளின் வழிகாட்டல் மற்றும் நெறிப்படுத்தலின் கீழ் நிந்தவூர் பொலிஸார் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளையும் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  
 

Leave a comment

Comment