TamilsGuide

தரமற்ற உணவு - நாடாளுமன்றில் மதிய உணவைத் தவிர்த்த ஊழியர்கள்

நாடாளுமன்றத்தின் சாதாரண ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் பானங்களின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஊழியர்கள் குற்றஞ்சாட்டி , பெருமளவிலான ஊழியர்கள் நேற்று(19) மற்றும் நேற்று முன்தினம்(18) மதிய உணவை உட்கொள்ளாமல் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு வேறு இடங்களிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பில்லை எனவும், பாதுகாப்புக் காரணங்களால் வீடுகளிலிருந்து உணவைக் கொண்டுவருவதற்கும் அனுமதி இல்லை எனவும் ஊழியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நிதி நெருக்கடி காரணமாக உணவு மற்றும் பானங்கள் வழங்குவதைக் குறிப்பிட்டளவு கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் நாடாளுமன்றத்தின் உணவு மற்றும் இல்லப் பராமரிப்புத் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஐந்து சிற்றுண்டிச்சாலைகள் இயங்கி வருகின்றன. எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் பிரதானமாக சாதாரண ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்ட சிற்றுண்டிச்சாலையின் உணவு மற்றும் பானங்கள் தொடர்பிலேயே முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment