TamilsGuide

ரசிகர்கள் பொறுப்புடன் நடந்துக்கோங்க - ஓம் ரிலீசுக்கு முன் தனுஷ் போட்ட பதிவு

நடிகர் தனுஷின் ஓம் படம் நாளை நவம்பர் 20ம் தேதி திரைக்கு வருகிறது. அதில் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.

தமிழ்நாடு மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் இந்த படத்தை தீவிரமாக படக்குழு ப்ரோமோஷன் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் காலை 6 மணி காட்சிக்கு அனுமதி அளித்த முதல்வர் விஜய்க்கு நன்றி சொல்லி தனுஷ் பதிவிட்டு இருக்கிறார். அது மட்டுமின்றி ரசிகர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

"ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலரின் கூட்டு உழைப்பாலும், அர்ப்பணிப்பாலும் உருவாவது. அத்தகைய திரைத்துறையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் நீங்கள் கொடுக்கக்கூடிய மிகப்பெரிய ஆதரவு, திரையரங்கிற்குச் சென்று திரைப்படங்களைப் பார்ப்பதும், அதன் மூலம் திரையுலகின் வளர்ச்சிக்குப் பங்களிப்பதும்தான்.

வரும் நவம்பர் 20ஆம் தேதி வெளியாகவிருக்கும் “ஓம்” திரைப்படத்தின் காலை 6 மணி காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசிற்கும், மரியாதைக்குரிய தமிழ்நாடு முதலமைச்சர் திரு. விஜய் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

காலை 6 மணி காட்சிக்கு வருகை தரும் ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்புடனும், பொறுப்புடனும், அடுத்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் நடந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். திரைப்படத்தைப் பார்த்து மகிழ்வதே உண்மையான கொண்டாட்டம்! அனைவருக்கும் அன்பும், நன்றியும்."

இவ்வாறு தனுஷ் குறிப்பிட்டு இருக்கிறார். 

Leave a comment

Comment