ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
பஹ்ரைனில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து ஈரான் கடந்த 13, 16, 17 ஆகிய 3 நாட்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது.
பஹ்ரைனின் ரிபா நகரில் உள்ள அமெரிக்க படைத்தளத்தில் உள்ள ரேடார், பஹ்ரைனின் ஷேக் இசா விமானப்படைத்தளத்தில் உள்ள ரேடாரை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களை பஹ்ரைன் வான்பாதுகாப்பு அமைப்பு நடுவானில் சுட்டு வீழ்த்தியது.
இந்நிலையில், பஹ்ரைனில் உள்ள படைத்தளங்களை குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி கொடுத்துள்ளது.
ஹர்முஸ் ஜலசந்தி அருகே ஈரானின் குவாசம் தீவில் உள்ள ஏவுகணை ஏவு தளங்கள் மற்றும் ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்கா இன்று மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.
பஹ்ரைன் தாக்குதலுக்கு பதிலடியாக குவாசம் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட பாதிப்பு விவரம் இதுவரை வெளியாகவில்லை.
அமெரிக்காவின் இந்த தாக்குதலை தொடர்ந்து குவைத் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. குவைத்தில் உள்ள பாதுகாப்புப்படை தளத்தை குறிவைத்து ஈரான் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலை குவைத் வான்பாதுகாப்பு அமைப்பு நடுவானில் சுட்டு வீழ்த்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.


