கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் உருவாகியுள்ள 'சத்தியவான் சாவித்திரி' படத்திற்கு மத்திய தணிக்கைக்குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இப்படம் நாளை மறுநாள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குனர் மிஷ்கின் கூட்டணியில் உருவாகி உள்ள படம் 'சத்தியவான் சாவித்திரி'. பிரவீன் எஸ். விஜய் இயக்கி உள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு எதிராக வாதிடும் வழக்கறிஞராக மிஷ்கின் நடித்துள்ளார்.
இவர்களுடன் பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர். சுந்தர்ராஜன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம். சி.எஸ் இசையமைத்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
'சத்தியவான் சாவித்திரி' நாளை மறுநாள் முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், 'சத்தியவான் சாவித்திரி' படத்திற்கு மத்திய தணிக்கைக்குழுவிடம் இருந்து U/A சான்றிதழ் கிடைத்துள்ளதாக அதன் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
‘சத்தியவான் சாவித்திரி’ படம் வெளியாகும் நாளை மறுநாள் தனுஷின் ‘ஓம்’, விஜய் ஆண்டனியின் ‘அப்பாகுட்டி’, ‘ஃப்ளாக்’, ‘வெகுளி’, ‘வயலெட் கனவு’ ஆகிய படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


