TamilsGuide

நடிகர் நஸ்லெனுக்கு 9 லட்சம் கைக்கடிகாரத்தை பரிசளித்த சூர்யா

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமான நஸ்லெனுக்கு, 'சீன்' படத்தின் வெற்றியை கொண்டாட சூர்யா ரூ.9 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரத்தை பரிசளித்தார். நஸ்லென் இதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'சீன்'. இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரபல மலையாள இளம் நடிகர் நஸ்லெனுக்கு சூர்யா விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

ஏற்கனவே 'பிரேமலு' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான நஸ்லென், 'சீன்' படத்தில் சூர்யாவுக்கே சவால் விடும் வகையிலான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டுகளைப் பெற்று வருகிறார். படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, உலகப் புகழ்பெற்ற கார்டியர் பிராண்டின் கிளாசிக் மாடல் கைக்கடிகாரத்தை நஸ்லெனுக்கு சூர்யா அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இதன் மதிப்பு சுமார் ரூ.9 லட்சம் எனக் கூறப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நஸ்லென், தனது கையிலிருந்த வாட்சைக் காட்டி இந்தத் தகவலை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். "இந்த வாட்சை சூர்யா அண்ணா எனக்குப் பரிசாகக் கொடுத்தார். இதைப் பற்றி ஒரு மேடையில் பேச வேண்டும் என சரியான தருணத்திற்காகக் காத்திருந்தேன்" என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சக நடிகரின் நடிப்பைப் பாராட்டி சூர்யா வழங்கிய இந்த அன்புப் பரிசு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 

Leave a comment

Comment