TamilsGuide

நவம்பர் முதல் பாதியில் ஒரு இலட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகள் வருகை

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம் (SLTDA) வெளியிட்டுள்ள அண்மைய புள்ளிவிவரங்களின்படி, 2026 நவம்பர் மாதத்தின் முதல் பாதியில் இலங்கைக்கு 102,469 சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.  

இதில், இந்தியாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதன் மூலம், அந்த நாடு தொடர்ந்து இலங்கையின் முதன்மையான சுற்றுலாச் சந்தையாகத் திகழ்கிறது.

இந்தக் காலகட்டத்தில் வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில், சுமார் 30 சதவீதத்திற்கு இணையான 31,185 பேர் இந்தியாவிலிருந்து வந்திருந்தனர்.

9,772 வருகைகளுடன் ரஷ்யா இரண்டாவது மிகப்பெரிய சந்தையாக உருவெடுத்தது.

அதனைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சியம் 6,898 வருகைகளுடன் அடுத்த இடத்தில் உள்ளது. 

ஜெர்மனி மற்றும் சீனா முறையே 6,574 மற்றும் 5,147 சுற்றுலாப் பயணிகளைக் கொண்டு நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களைப் பிடித்தன.

அண்மைய புள்ளிவிவரங்களின்படி, 2026-ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1,964,773 ஆக உயர்ந்துள்ளது.

2026 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில், ஒட்டுமொத்த வருகையாளர் சந்தை தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது.

இக்காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து 530,810 பேர் வருகை தந்தனர். 

ஐக்கிய இராச்சியம் 180,027 வருகையாளர்களுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தது, அதைத் தொடர்ந்து சீனா 128,887 வருகையாளர்களுடன் மூன்றாம் இடத்தில் இருந்தது.

ஜெர்மனி மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து முறையே 111,879 மற்றும் 100,030 வருகைகள் பதிவாகியுள்ளன.

இதன் மூலம், குறிப்பிட்ட காலப்பகுதியில் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த முதல் ஐந்து நாடுகளின் பட்டியலில் இவை இடம்பெற்றுள்ளன.
 

Leave a comment

Comment