TamilsGuide

வெளிநாட்டு மாணவர்கள் மீதான புதிய விசா கட்டுப்பாடுகள் ரத்து - அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

அமெரிக்காவில் வெளிநாட்டு மாணவர்கள் மீதான புதிய விசா கட்டுப்பாடுகள் ரத்து செய்வதாக நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், குடியேற்றம் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். இதில் விசாக்களுக்கும் பல கெடுபிடிகளை கொண்டு வந்தார்.

இதற்கிடையே வெளிநாட்டு மாணவர்கள் தங்கும் காலத்திற்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்து புதிய விசா கொள்கையை ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்தது. வெளிநாட்டு மாணவர்கள் தங்களது படிப்பு முடியும் காலம் வரை அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் புதிய விதியின் படி, மாணவர்கள் அதிக பட்சம் 4 ஆண்டுகள் மட்டுமே தங்க முடியும் என்றும் அதன்பிறகு விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.இதை எதிர்த்து அமெரிக்க பல்கலைக்கழகங்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அமைப்புகள் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.

இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த மாவட்ட கோர்ட்டு நீதிபதி டென்னிஸ் சேலர், வெளி நாட்டு மாணவர்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் கொண்டு வந்த புதிய விதியை ரத்து செய்வதாக அறிவித்து தீர்ப்பு அளித்தார்.

நீதிபதி தனது தீர்ப்பில், அரசின் இந்தகொள்கை தன்னிச்சையானது, நிலையற்றது, அதிகார வரம்பைத் தவறாகப் பயன்படுத்துவது மற்றும் சட்டத்திற்கு முரணானது.

அமெரிக்காவில் வெளி நாட்டு மாணவர்களுக்குக் கல்வி வாய்ப்புகளை வழங்கும் ஒரு செயலையே உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தடுக்க அல்லது செயலிழக்க வைக்க முயல்கிறது.

இந்தக் கொள்கை என்பது வெளிநாட்டு மாணவர்கள் பி.எச்.டி போன்ற நீண்ட காலப் படிப்புகளில் ஈடுபடுவதைத் தடுக்கும். அவர்கள் கூட்டுப் பட்டங்களைப் பெறுவதை யும், அவர்கள் தங்கள் கல்விப் பாடப்பிரிவை மாற்றுவதையும் தடுக்கும் என்று தெரிவித்தார்.

அமெரிக்காவில் 11 லட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் இந்திய மாணவர்களே அதிக அளவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a comment

Comment