பஹ்ரைன் மீது ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பஹ்ரைனில் உள்ள அமெரிக்க படைத்தளத்தை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. பஹ்ரைனின் ரிபா நகரில் உள்ள அமெரிக்க படைத்தளத்தில் உள்ள ரேடாரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
ஆனாலும், இந்த தாக்குதல் வான்பாதுகாப்பு அமைப்பால் முறியடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பஹ்ரைனின் ரிபா நகரில் உள்ள அமெரிக்க படைத்தளத்தில் உள்ள ரேடாரை குறிவைத்து ஈரான் நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலும் பஹ்ரைன் வான் பாதுகாப்பு அமைப்பால் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்நிலையில், பஹ்ரைன் மீது ஈரான் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.
பஹ்ரைனின் ஷேக் இசா விமானப்படைத்தளத்தில் உள்ள அமெரிக்க ரேடார் அமைப்பை குறிவைத்து ஈரான் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது.
இந்த ட்ரோன் தாக்குதலை பஹ்ரைன் வான்பாதுகாப்பு அமைப்பு நடுவானில் முறியடித்தது. இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


