TamilsGuide

பல கோடி வசூலித்த ராமாயணா... படக்குழுவின் அடுத்த மாஸ் பிளான்

Ramayana Bo: பான் இந்திய படங்கள் அதிகம் வருகிறது, ரிலீஸ் ஆன எல்லா படங்களுமே ஹிட்டாகிறதா என்றால் சந்தேகம் தான்.

ஒரு சில படங்கள் க்ளிக் ஆகும், பல படங்கள் வந்த வேகம் தெரியாமல் சென்றுவிடும். இந்த பான் இந்தியா படங்கள் லிஸ்டில் சமீபத்தில் இணைந்த திரைப்படம் தான் ராமாயணா.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி, ரவி துபே, ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடிக்க இப்படம் தயாரானது. தீபாவளி ஸ்பெஷலாக கடந்த நவம்பர் 5ம் தேதி இந்தியாவில் படம் வெளியானது.

வால்மீகியின் ராமாயணத்தை மையப்படுத்தி நிறைய படங்கள் வர இப்போது மீண்டும் ராமாயணா கதை உருவாகியிருக்கிறது.

படம் ரிலீஸ் ஆகி 11 நாள் முடிவில் ரூ. 1000 கோடிக்கு மேலான ராமாயணா படம் வசூலித்திருந்தது. இப்போது படக்குழு ராமாயணா முதல் பாகம் குறித்து அடுத்த சூப்பர் பிளான் போட்டுள்ளனர்.

அதாவது ஆங்கிலம் மற்றும் சீன மொழி வசன வரிகளுடன் ஹாங்காங்கில் வெளியாகிவிட்டது.

இந்த நிலையில் ராமாயணா படத்தின் முதல் பாகம் அடுத்தாண்டில் சீனா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய 4 முக்கிய சர்வதேச நாடுகளில் வெளியாகும் என தகவல் வந்துள்ளது.
 

Leave a comment

Comment