Tredmill-இல் ஓடிக் கொண்டிருந்த இளம்பெண் உடற்பயிற்சி கூட ஜன்னல் வழியே கீழே விழுந்து பலி
இந்தோனேசியாவில் உடற்பயிற்சிக் கூடத்தின் மூன்றாவது மாடி ஜன்னலிலிருந்து பெண் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் உள்ள பொன்டியானாக் நகரில் பாத்தியா (22) தனது தோழி மற்றும் தம்பியோடு உள்ளூர் 'கே-ஜிம்' என்ற உடற்பயிற்சிக் கூடத்திற்கு சென்றார்.
அவர் மூன்றாவது மாடியில் உள்ள டிரெட்மில் பிரிவில் தனது உடற்பயிற்சியை தொடங்கினார்.
சுமார் 30 நிமிடங்கள் டிரெட்மில்லில் ஓடிய பிறகு, அவர் தனது வேகத்தைக் குறைத்தார். அந்த நேரத்தில், அவர் திடீரென நிலை தடுமாறிப் பின்னால் விழுந்தார்.
டிரெட்மில்லின் பின்புறத்திற்கும் திறந்திருந்த ஜன்னலுக்கும் இடையில் வெறும் 2 அடி இடைவெளி மட்டுமே இருந்தது.
மேலும், அந்த ஜன்னல் தரையிலிருந்து 30 சென்டிமீட்டர் உயரத்திலும், சுமார் 90 சென்டிமீட்டர் அகலத்திலும் மட்டுமே இருந்தது.
அந்த பெண் நிலை தடுமாறி, மூன்றாவது மாடியிலிருந்து நேராக ஜன்னல் வழியாகக் கீழே விழுந்தார்.






















