TamilsGuide

நாடு வங்குரோத்து அடையக்கூடிய அபாயம் குறித்து எச்சரிக்கை

நாடு வங்குரூத்துடைய அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதயகம்மன்பில இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நாடாளுமன்றில் சமர்ப்பித்த வரவு செலவு திட்டம் தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி சமர்ப்பித்த வரவு செலவு திட்டத்தில் கூற குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால் அடுத்த ஆண்டில் நாடு வங்குரோத்து அடைந்து விடும் என அவர் தெரிவித்துள்ளார்.

2028 ஆம் ஆண்டில் நாடு வங்குரோத்து அடையும் என்பது பொய் என ஜனாதிபதி வரவு செலவுத் திட்ட உரையில் கூறியிருந்தார்.

எனினும் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்பட்டால் நாடு வங்குரோத்து அடைவது நிச்சயம் என உதய கம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் இந்த அரசாங்கத்திற்கு வாய் இருக்கும் அளவிற்கு செயல்திறன் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அரசாங்கம் ஒதுக்கப்பட்ட நிதிகளை செலவிட கூடிய ஆற்றல் மிக்க அரசாங்கம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

திட்வா புயலுக்காக திரட்டப்பட்ட நிதியில் பெருமளவு நிதி இன்னமும் செலவழிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்திற்கு திட்டங்களை அமல்படுத்தக்கூடிய திறன் இல்லாத காரணத்தினால் நாடு வங்குரோத்து அடைந்து விடும் என்ற கவலை இல்லை என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 
 

Leave a comment

Comment