TamilsGuide

லொட்டரியில் 470 கோடி வென்ற தம்பதி - ஒரு பகுதியை சமூக முன்னெடுப்புக்கு வழங்க திட்டம் 

canadian couple wons rs.470 crores in lottery: லொட்டரியில் ரூ.470 கோடி வென்ற கனேடிய தம்பதி, அதில் ஒரு பகுதியை சமூக முன்னெடுப்புக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.

கனடாவில் உள்ள நியூ பிரன்சுவிக் மாகாணத்தின் டல்ஹௌசி நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்றவரான ஷான் ரியான், சமீபத்தில் லொட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். 

வெற்றி பெற்ற டிக்கெட் ரெஸ்டிகௌச் கவுண்டியில் விற்கப்பட்டதாக அவர்  கேள்விப்பட்டபோது, ​​ஏமாற்றம் அடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில், தனது டிக்கெட்டைச் சரிபார்க்கும் ஆசையை அடக்கிக்கொண்டுள்ளார்.

அவரது மனைவி மற்றும் மகன் நாம் வாங்கினோமா? நம்மிடம் உள்ளதா சரிபார்க்க போகிறோமா என கேட்டபோது இல்லை என கூறி, அந்த ஆசையை உயிர்ப்புடன் வைக்க விரும்பியுள்ளார்.

அதன் பிறகு அந்த டிக்கெட்டை சரிபார்த்த போது, ஒவ்வொரு எண்ணும் சரியாக பொருந்தியுள்ளதை உணர்ந்த அவருக்கு இதயம் படபடத்துள்ளது. 

குலுக்கலில் 7 எண்களையும் வெற்றிகரமாகப் பொருத்தி, 50 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.470 கோடி) பரிசை வென்றதாக அட்லாண்டிக் லொட்டரி  அறிவித்தது.

இந்த மாபெரும் பரிசுத்தொகையை வென்றதன் மூலம், ஆசிரியராகப் பணிபுரியும் அவரது மனைவி கோலெட் ஓய்வு பெற உள்ளார்.

இந்த பரிசு குறித்து பேசிய ஷான் ரியான், "இது நம்ப முடியாததாக இருக்கிறது. இது சற்று மலைக்க வைக்கிறது, ஆனால் இதை உணரும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறினார்.

கோலெட் உலகை சுற்றி பயணம் மேற்கொள்ள விரும்பும் நிலையில், ஷான் ரியான், அமைதியான வாழ்க்கை முறையை விரும்புவதோடு, குடும்ப நாய்களைப் பராமரிப்பதற்காக வீட்டிலேயே இருக்கத் திட்டமிட்டுள்ளார்.

அதில் பெரும்பகுதியை, தங்களது 7 பிள்ளைகளையும் பேரக்குழந்தைகளையும் ஆதரிப்பதற்காக நேரடியாகச் வழங்க உள்ளதாவும், அதில் குறிப்பிட்ட பகுதியை வடக்கு நியூ பிரன்சுவிக்கில் உள்ள சமூக முன்னெடுப்புகளுக்கு விநியோகிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.  
 

Leave a comment

Comment