TamilsGuide

கனடாவில் தாய், மகளைக் கொன்ற 4 கரடிகள் சுட்டுக் கொலை

மேற்கு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (British Columbia) பகுதியில் கிரிஸ்லி (Grizzly) வகை கரடிகள் தாக்கியதில் ஒரு தாயும், அவரது வயதுவந்த மகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட நான்கு கரடிகளும் சுட்டுக் கொல்லப்பட்டன.

உயிரிழந்தவர்களின் உடலில் இருந்த தடயங்களைக் கொண்டு நடத்தப்பட்ட டிஎன்ஏ (DNA) பரிசோதனையில், சுட்டுக் கொல்லப்பட்ட அந்த நான்கு கரடிகளுமே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவை என்பது அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பெண் கரடியும் அதன் மூன்று குட்டிகளும் கொல்லப்பட்டுள்ளன

பொதுவாக, வனவிலங்குகள் மனிதர்களைத் தாக்கிக் கொல்லும் பட்சத்தில், அவை மீண்டும் மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக மாறுவதைத் தடுக்க வனத்துறை அதிகாரிகள் இத்தகைய நடவடிக்கைகளை எடுப்பது வழக்கம் ஆகும்.
 

Leave a comment

Comment