TamilsGuide

கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பின் பல வீதிகள்

இன்று பிற்பகல் முதல் பெய்து வரும் கன மழை காரணமாக கொழும்பின் பல வீதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய சங்கராஜ மாவத்தை, கெத்தாராம சந்தி மற்றும் ஆமர் வீதி உள்ளிட்ட பல வீதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கன மழை காரணமாக கொழும்பின் பல முக்கிய வீதிகளில் பாரிய போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
 

Leave a comment

Comment