பங்களாதேஷில் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தலைநகர் டாக்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் நாட்டு வெடிகுண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது பல பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளன. சம்பவங்கள் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெடிகுண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.
இந்த தாக்குதல்களின் பின்னணியில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி ஆதரவாளர்கள் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும், அனைத்துத் தாக்குதல்களுக்கும் ஹசீனா ஆதரவாளர்களே காரணம் என்பது இதுவரை முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. இதற்கிடையில், பங்களாதேஷ் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


