2026ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த ஆண் தடகள வீரர் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட 10 வீரர்களில் ஒருவரான இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க பதிரகே, தரவரிசையில் 8ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
2026ஆம் ஆண்டில் ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் அவர் தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளார்.
அத்துடன், டயமண்ட் லீக் மற்றும் உலக தடகள அல்டிமேட் செம்பியன்ஷிப் பட்டங்களையும் வென்றார்.
மேலும், ரோமில் நடைபெற்ற டயமண்ட் லீக் போட்டியில் 92.62 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து புதிய இலங்கை தேசிய சாதனையைப் படைத்ததுடன், ஆசிய வரலாற்றில் இரண்டாவது சிறந்த ஈட்டி எறிதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.


