சூர்யா கெரியரில் இந்த வருடம் மிகவும் பாசிட்டிவ் ஆக மாறி கொண்டிருக்கிறது. தொடர் தோல்விகளால் கடந்த சில வருடங்களில் சரிவை சந்தித்து வந்த நிலையில் இந்த வருடம் கருப்பு மிகப்பெரிய ஹிட் ஆகி அவருக்கு கம்பேக் கொடுத்தது.
அடுத்து வந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.
அடுத்து அவர் நடித்த சீன் படம் சமீபத்தில் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி இருந்தது. அதற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
தங்க நாணயம்
சீன் படம் வெற்றி அடைந்திருக்கும் நிலையில் அதை கொண்டாடும் விதமாக சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் படக்குழுவினர் எல்லோரையும் அழைத்து, பார்ட்டி கொடுத்து, ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் தங்க நாணயத்தை பரிசாக வழங்கி இருக்கின்றனர்.
அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.


