TamilsGuide

தொண்டு நிறுவனத்தில் 500,000 டொலருக்கும் மேல் மோசடி செய்த பெண் கைது

டொராண்டோவைச் சேர்ந்த பெண் ஒருவர், ஜி.டி.ஏ பகுதியில் பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனம் ஒன்றில் 500,000 டொலருக்கும் அதிகமான தொகையை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுளார்.

பெயர் குறிப்பிடப்படாத அந்தத் தொண்டு நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிந்த அவர், பல மோசடிகளை அரங்கேற்றி நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகப் காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் 20 அன்று, டொராண்டோவைச் சேர்ந்த 47 வயதான அனாபெல்லே மெனிஸெஸ் கைது செய்யப்பட்டார். அவர் மீது 5,000 டொலருக்கும் மேற்பட்ட மோசடி, போலியான ஆவணத்தைத் தயாரித்தல் மற்றும் குற்றச் செயல்கள் மூலம் பெறப்பட்ட பணத்தைச் சலவை செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. மெனிஸெஸின் வழக்கு விசாரணை வரும் டிசம்பர் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், இது குறித்துக் கூடுதல் தகவல் அறிந்தவர்கள் 416-808-7300 என்ற எண்ணில் டொராண்டோ காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
 

Leave a comment

Comment