இங்கிலாந்து ஹாம்ப்ஷயரில் (Hampshire) பிரதேசத்தில் 63 வயதுடைய அலிசன் மூர் (Alison Moore), போதையில் தனது கணவர் ரோப் மூர் (Rob Moore) மீது தாக்குதல் நடத்தி, அவரது வாயில் மலத்தைத் திணித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாது அலிசன் மூர் (Alison Moore) கணவரைத் துடைப்பக் குச்சியால் முதுகில் அடித்தது, திருமண மோதிரம் அணிந்த கையால் முகத்தில் குத்தியது (மார்ச் 2024 மற்றும் ஆகஸ்ட் 2026) உள்ளிட்ட முந்தைய தாக்குதல்களுக்கான ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
சவுத்ஹாம்ப்ரன் கிரவுன் நீதிமன்றத்தில் (Southampton Crown Court) நடைபெற்ற விசாரணையில், அலிசன் மூருக்கு 18 மாத கால இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை (suspended sentence) விதிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் ‘பூகேட்’ (Poogate) என்ற பெயரில் அழைக்கப்பட்டு, உள்ளூர் மதுபானசாலையான ‘தி கம்பாஸஸ்’ (The Compasses)-இல் முக்கிய பேசும் பொருளாக மாறியுள்ளது.
வழக்கறிஞர் ரோஸ் பியூன்ஸ் (Rose Burns) வாதாடுகையில், அலிசன் மூர் குறுகிய காலத்தில் பெற்றோர், சகோதரி (படிகளிலிருந்து விழுந்து இறந்தவர்), மாமா மற்றும் செல்லப்பிராணி நாய் ஆகியோரின் தொடர்ச்சியான மரணங்களால் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், சுயகட்டுப்பாட்டை இழந்தே இச்செயலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
இன்னிலையில் மதுப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்காக அலிசன் தற்போது ‘ப்ரியரி’ (Priory) புனர்வாழ்வு நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறதாக கூறப்படுகின்றது


