TamilsGuide

260 அமெரிக்க விமானங்களை வீழ்த்திய ஈரான் - IRGC தகவல்

Iran Claims 260 US Aircraft Downed, 7 Drones Seized: 260 அமெரிக்க விமானங்களை வீழ்த்தியுள்ளதாக ஈரானின் IRGC தெரிவித்துள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) அமெரிக்காவுடன் ஏற்பட்ட மோதல்களின் போது 260 எதிரி விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், ஏழு MQM-170 கண்காணிப்பு ட்ரோன்களை சேதமின்றி கைப்பற்றியதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த தகவலை IRGC விண்வெளி மற்றும் ஏவுகணைப் பிரிவு செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் ஹொசைன் மொஹெப்பி தெஹ்ரானில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.

ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மிகவும் வலுவாக செயல்பட்டதாக கூறிய அவர், எதிர்காலத்தில் மீண்டும் மோதல் ஏற்பட்டால் உலகம் இதுவரை காணாத புதிய பாதுகாப்பு திறன்களை ஈரான் வெளிப்படுத்தும் என எச்சரித்தார்.

அதே நேரத்தில், இவர் முன்வைத்துள்ள தகவல்கள் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

நிலத்தடியில் ட்ரோன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் ஈரான்

மேலும், சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து ஏவுகணை மற்றும் ட்ரோன் உற்பத்தி நிலையங்களை நிலத்தடியில் அமைக்க ஈரான் நடவடிக்கை எடுத்துள்ளதாக மொஹெப்பி தெரிவித்தார்.

எதிரிகள் தாக்குதல்கள் நடத்திக்கொண்டிருந்த போதும், நாட்டின் பாதுகாப்பு உற்பத்தி பணிகள் தடையின்றி தொடர்ந்ததாகவும் அவர் கூறினார். ஈரான் தற்போது உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை உருவாக்கி வருவதாகவும், வெளிநாடுகளின் உதவியை குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெறிவித்துள்ளார்.

அறிவியல் ஆராய்ச்சி, தொழில்துறை உற்பத்தி மற்றும் தற்சார்பு ஆகிய மூன்று அடிப்படைகளின் மூலம் தனது பாதுகாப்புத் துறையை ஈரான் வலுப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

Arman ஏவுகணை, 358 ட்ரோன் மற்றும் Khordad-3 வான் பாதுகாப்பு அமைப்பு போன்றவை ஈரானின் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தித் திறனுக்கான முக்கிய உதாரணங்களாக அவர் குறிப்பிட்டார். உலகளாவிய தடைகள் மற்றும் அழுத்தங்கள் இருந்தபோதிலும், பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் தன்னிறைவை அடைந்து வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்புகள் அனைத்தும் ஈரானின் "Aerospace Week" தொடர்பான நிகழ்வுகளின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் தனது இராணுவ வலிமை, நிலத்தடி உற்பத்தி அமைப்புகள் மற்றும் உள்நாட்டு ஆயுத மேம்பாட்டு திறன்களை உலகிற்கு வெளிப்படுத்த ஈரான் முயற்சி மேற்கொண்டு வருகிறது.    
 

Leave a comment

Comment