அரசாங்கம் கொண்டுவர இருக்கின்ற பயங்கரவாத்திலிருந்து அரசைப் பாதுகாக்குன்ற சட்டம், மற்றும் ஒழுங்கமைப்பு செய்யப்பட்ட குற்றங்களை தடுப்பதற்கான சட்டம், ஆக்கியவற்றுக்கு திராக எதிர்ப்புக்களை நிறைவேற்ற வேண்டும். என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் தெரிவித்துள்ளார
அவர் இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்திற்குச் சார்பாக எந்த ஒரு பிரதேச சபையும் ஆட்சி நடைபெறவில்லை.
ஆகவே அதனை எதிர்க்கக்கூடிய சபைகள்தான் மட்டக்களப்பிலுள்ள பன்னிரண்டு சபைகளுமாக இருக்கும் என நான் நம்புகின்றேன்.
அந்த அடிப்படையில் நாங்கள் நேர்கணியமாகச் சிந்தித்து இந்த விடயத்தை நாங்கள் எதிர்மறையான இந்தச் சட்டத்தை எதிர்க்கின்ற செயல்பாட்டை நிச்சயமாக உள்ளுராட்சி மன்றங்கள் நிறைவேற்ற வேண்டும்.
ஊடக சந்திப்புகள் மற்றும் எதிர்ப்பு செயல்பாடுகக்கள் மத்தியில் இதனைக் கொண்டு செல்வோம்.
கடந்த காலத்தில் இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலமாக அரச பயங்கரவாதம் அதிகமாக நடைபெற்றன. இந்த அரசாங்கம் நுட்பமாக அல்லது தந்திரோபாயமாக விடயங்களை செய்து கொண்டிருக்கின்றது.
வெளிநாட்டுத் தூதரகங்களுக்குக்கூட இந்த விடயங்களைக் கொண்டு சென்று அவர்களுக்கு நாங்கள் அந்த ராஜதந்திரங்களின் அடிப்படையில் அவர்களுக்கு நாங்கள் சொல்ல வேண்டிய கடப்பாடு இருக்கின்றது. அதனையும் நாங்கள் செய்வோம்.
நாடாளுமன்ற மட்டத்திலும் சரி, உள்ளுராட்சி சபை மட்டத்திலும்சரி அல்லது ஊடகங்கள் மத்தியிலும்சரி, அடுத்ததாக இராஜதந்திர மட்டங்களிலும்சரி, சர்வதேச ரீதியாகவும், இலங்கைக்கு உதவி அளிக்கின்றவர்கள் வருகின்ற போதும்கூட நாங்கள் நிச்சயமாக இந்த விடயம் தொடர்பில் ஒரு பயங்கரமான சூழலை உருவாக்கப்போகின்றது என்பது தொடர்பில் தெரிவிப்போம்.
இந்த அரசாங்கம் தனது எதிர்கால நிலைப்பாட்டை எவ்வாறு மாற்றப்போகின்றது என்பதற்கு ஒரு கட்டியம் கூறுவதாக இந்தச் சட்டம் இருக்கின்ற விடயத்தையும் நாங்கள் நிச்சயமாக சொல்லுவோம்.
இந்த விடயத்தை ஊடகவியலாளர்கள் உள்ளுராட்சி சபைகளுக்குக் கொண்டு செல்ல வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.


