2026 ஒக்டோபர் மாத இறுதியில் இலங்கையின் மொத்த அதிகாரப்பூர்வ வெளிநாட்டுக் கையிருப்பு 7.09 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.
அதன்படி, ஒக்டோபர் மாத இறுதியில், மொத்த அதிகாரப்பூர்வ கையிருப்பு தற்காலிக மதிப்பீட்டின்படி 7,086 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்தக் கையிருப்புத் தொகையில், சீன மக்கள் வங்கியுடனான (People’s Bank of China) நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் (swap arrangement) மூலம் பெறப்பட்ட நிதியும் உள்ளடங்கும்.
இதற்கிடையில், ஒக்டோபர் மாதத்தில் உள்நாட்டு அந்நிய செலாவணி சந்தையிலிருந்து 191 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான அந்நிய செலாவணியை நிகர அடிப்படையில் கொள்முதல் செய்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கையிருப்பு நிலை இவ்வாறிருந்த போதிலும், 2026 நவம்பர் 6 நிலவரப்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, ஆண்டின் தொடக்கத்திலிருந்து 6.7 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.
இந்தத் தகவல்கள், நவம்பர் 6 அன்று மத்திய வங்கியால் வெளியிடப்பட்ட ‘வாராந்திர பொருளாதாரக் குறிகாட்டிகள்’ அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.


