தனியார் துறையினரின் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கு தனியார் துறை தொழில் வழங்குநர்களுடன் கலந்துரையாடி சாதகமான தீர்மானத்தை எட்டியுள்ளோம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசுச் செய்திகள் கொழும்பில் நேற்று (07) நடைபெற்ற தொழிற்சங்க தேசிய மாநாட்டில் கலந்துகொண்டபோதே இதனை கூறியுள்ளார். நாட்டின் பொருளாதாரத்திற்கு தனியார் துறையே மிகப்பெரிய பங்களிப்பை வழங்குகிறது.
அத்துறையில் உள்ள ஊழியர்களின் பொருளாதார நலன் குறித்து அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளோம்.தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வணிகச் சங்கங்களுடன் நடத்திய கலந்துரையாடல்களைத் தொடர்ந்து அடிப்படைச் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகள் குறித்தும், அதிக வருமானம் ஈட்டுபவர்கள் மீது விதிக்கப்படும் உழைக்கும்போது செலுத்தும் வரி குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போதுள்ள, உழைக்கும்போது செலுத்தும் வரி வரம்பு முன்னர் 100,000 ரூபாவிலிருந்து 150,000 ரூபாவாக உயர்த்தப்பட்டிருந்தது.
அதனை திருத்தம் செய்தோம் 2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் மேலதிக வரி நிவாரணத்தை வழங்குவதற்காக இந்த வரம்பை மேலும் குறைக்க எதிர்பார்த்துள்ளோம்” என கூறியுள்ளார்.


