TamilsGuide

அமீரகத்தில் உள்ள குடிமக்கள் எச்சரிக்கையுடன்' இருக்குமாறு அமெரிக்கா அறிவிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க குடிமக்கள் 'அதிகரித்த எச்சரிக்கையுடன்' இருக்குமாறு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் மற்றும் ஹூதிகளிடமிருந்து ஆயுதத் தாக்குதல்களின் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதால், அமெரிக்கர்கள் அதிகரித்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

அமீரகத்தில் உள்ள குடிமக்கள் எச்சரிக்கையுடன்

மேலும், அமெரிக்க அரசாங்க அதிகாரிகளைக் குறிவைத்து ஈரான் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்தும் அது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவில் எச்சரித்துள்ளது.

விமானப் பயணங்கள் இரத்து செய்யப்படுதல், வான்வெளி மூடப்படுதல் மற்றும் பயணங்களில் ஏற்படக்கூடிய இடையூறுகள் குறித்து குடிமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தூதரகம் கூறியுள்ளது.

அதேவேளை சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகமும் முன்னதாக இதேபோன்ற எச்சரிக்கையை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


 

Leave a comment

Comment