TamilsGuide

புதிதாக ஒன்று உருவாகும் போது அதிர்வு இருக்கத்தான் செய்யும்- தனுஷ் பேச்சு

சென்னையில் நடந்த விழாவில் தனுஷ், 'புதிதாக உருவாகும் விஷயங்கள் அதிர்வுகளை ஏற்படுத்தும், ஆனால் அவை நல்லதுக்காகவே இருக்க வேண்டும்' என கூறினார். 'ஓம்' திரைப்படம் வரும் 20-ந்தேதி திரைக்கு வர உள்ளது. மழைக்கால உதவிகளை செய்ய ரசிகர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள புதிய திரைப்படம் 'ஓம்'. இதில் சாய் பல்லவி, ஸ்ரீலீலா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகிற 20-ந்தேதி திரைக்கு வர உள்ளது.

இதற்கிடையில் சென்னையில் நடந்த பட விழாவில் நடிகர் தனுஷ் கலந்துகொண்டார். ரசிகர்கள் மத்தியில் தனுஷ் பேசும்போது, "நாம் என்ன பேசினாலும் சிலர் ஏதாவது ஒன்றை பேசிக்கொண்டிருக்கத்தான் போகிறார்கள். எனவே நாம் நமது மனதில் பட்டதை தைரியமாகவே பேசலாம். ஏனெனில் மற்றவர்கள் ஏதாவது பேசுவார்கள் என்பதற்காக நாம் மனதில் பட்டதை பேசாமல் இருக்க முடியாது.

புதிதாக ஒன்று உருவாகும்போது அதிர்வு இருக்கத்தான் செய்யும். அந்த அதிர்வு நல்லதுக்காக மட்டுமே பயன்பட வேண்டும். மழைக்காலங்களில் தேவைப்படுபவருக்கு தேவையான உதவிகளை ரசிகர்கள் செய்யுங்கள்" என்றார்.

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வர போவதாக பேச்சு அடிபடுகிறது. அவரது செயல்பாடுகளும் அதை உறுதிப்படுத்துவதாக அமைகின்றன. இந்த நிலையில் சென்னையில் நடந்த பட விழாவில் தனுஷ் பேசியது அனைவரையும் கவனிக்க வைத்திருக்கிறது.
 

Leave a comment

Comment