உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு 'சண்டியர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் தனது சமூக வலைதள பக்கங்களில் நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றைப் பகிர்ந்துள்ளார்
இது குறித்து இயக்குநர் தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது
எனது அனைத்துப் படைப்புகளிலும் நான் அறிந்தும் அறியாமலும் ஒரு உள்னத கலைஞனின் பலவித நாக்கங்கள் இருந்துகொண்டே வந்தது. அவையனைத்தும் என்னை செழுமைப்படுத்திக் கொண்டே இருந்திருக்கிறது. சில துளி அமிர்தத்தை மட்டுமே சுவைத்துக்கொண்டிருந்த எனக்கு பாற்கடலில் மிதக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆம், இன்று நான் அந்த உள்ளத மகா கலைஞள் கமல்ஹாசன் அவர்களுடன் கைகோர்த்து நிற்கிறேன்.
என்னை இயக்குனராகத் தேர்ந்தெடுத்து என் கதைக்கு உயிரூட்டிய எனது மானசீக ஆசானை நான் இயக்குவதோடு, இந்தப் பயணத்தில் இன்னும் நிறைய நிறைய கற்றுக்கொள்ளப் போகிறேன் என்பதே எனக்கு மகிழ்ச்சி.
இப்பெருங்கனவை நிஜமாக்க உதவிய பெருமதிப்பிற்குரிய அண்ணன் திரு.மகேந்திரன் அவர்களுக்கும், போன்பிற்குரிய நண்பன் திரு.டிஸ்னி அவர்களுக்கும் நன்றி சொல்வதற்குப் பதிலாக, நானும் எனது குழுவும் முழு சுவனத்தையும் உழைப்பையும் கொடுத்து இந்த திரைப்படத்தை ஆகச்சிறந்த படைப்பாக சினிமா ரசிகர்களுக்கு கொடுப்போம் என்ற நம்பிக்கையை விதைக்கிறேன். அனைவருக்கும் நன்றி.
என்று தெரிவித்துள்ளார்.


