பிறந்தநாளை தொடர்ந்து சமூக வலைதளத்தில் சில அழகிய புகைப்படங்களை ஆலியா பட் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன், திரையுலக வட்டாரத்திலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
பிரபல பாலிவுட் நட்சத்திர தம்பதிகளான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் தங்களது மகள் ரஹாவின் நான்காவது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடியுள்ளனர். பிறந்தநாளைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் சில அழகிய புகைப்படங்களை ஆலியா பட் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன், திரையுலக வட்டாரத்திலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டின் மகளான ரஹா தனது நான்காவது பிறந்தநாளைக் நேற்று கொண்டாடினார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்துடன் கொண்டாடிய மகிழ்ச்சியான தருணங்களை ஆலியா பகிர்ந்துள்ளார்.
முதல் புகைப்படத்தில், ரன்பீர் மற்றும் ஆலியா இருவரும் அன்போடு அருகில் நிற்க, பிறந்தநாள் கேக் வெட்டும் தருணத்தில் ரஹா காட்சியளிக்கிறார்.
வெள்ளை நிற டி-ஷர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸில் ரன்பீர் மிகவும் சாதாரணமான தோற்றத்திலும், ஆலியா ப்ரீஸியான பிரிண்டட் மினி உடையில் அழகாகவும் காணப்பட்டனர். மலர் டிசைன்களுடன் கூடிய கிரே நிற செக்ட் உடையில் ரஹா மிகவும் அழகாக காட்சியளித்தார். அம்மா ஆலியாவால் நேர்த்தியாகச் சீவப்பட்ட அவரது தலைமுடி பிறந்தநாள் தோற்றத்தை மேலும் அழகாக்கியது.
பகிரப்பட்ட மற்ற புகைப்படங்களில், ரஹா பச்சை நிற புல்வெளியில் ஓடி விளையாடும் காட்சியும், குடும்பத்தினரின் ஓவியம் வரையப்பட்ட பிறந்தநாள் கேக்கின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, ரன்பீரும் ரஹாவும் சிறப்புத் தருணங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது, ஆலியா தனது மகளின் கன்னத்தில் பாசத்தோடு முத்தமிடும் ஒரு அழகான தருணம் அனைவரையும் கவர்ந்துள்ளது. மேலும், ரஹா ரெயின்போ நிறங்களில் வர்ணம் தீட்டும் படமும், மகிழ்ச்சியில் மிதக்கும் ஆலியாவின் புகைப்படமும் அந்த ஆல்பத்தில் இடம்பிடித்துள்ளன. புகைப்படங்களைப் பகிர்ந்த ஆலியா, "அவளுக்கு வயது 4" என்று மிகவும் எளிய மற்றும் அன்பான தலைப்பை குறிப்பிட்டுள்ளார்.
ரஹாவின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடந்து சில நாட்களுக்கு முன்பாக, 'ராமாயணம்' படப்பிடிப்புத் தளத்தில் ரன்பீரும் ரஹாவும் இருந்த தருணங்களை ஆலியா பகிர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். இதிகாசப் பின்னணியில் உருவாகும் இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், ராமர் வேடத்தில் தனது கணவரின் உழைப்பை பாராட்டியும், படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்தும் ஆலியா ஒரு உணர்ச்சிகரமான குறிப்பை எழுதியிருந்தார்.
முன்னதாக ரன்பீர் கபூர் தனது மகளின் படப்பிடிப்பு அனுபவங்களைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார். ரஹா பலமுறை படப்பிடிப்புத் தளத்திற்கு வந்துள்ளதாகவும், சாய் பல்லவி மற்றும் லட்சுமணன் வேடத்தில் நடிக்கும் ரவி துபே ஆகியோருடன் இணைந்து ஒரு காட்சியிலும் அவர் நடித்துள்ளதாகவும் ரன்பீர் தெரிவித்தார். மேலும், தாங்கள் இருவரும் ரஹாவுக்கு சிறுவயதிலிருந்தே ராமாயண கதைகளைக் கூறி வளர்த்துள்ளதாகவும், திரையில் அவள் காணவிருக்கும் முதல் கதை இதுவாக இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும் அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.


