TamilsGuide

தீபாவளியை முன்னிட்டு கிழக்கில் தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கு நவம்பர் 9-ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு ஈடாக, நவம்பர் 14-ஆம் திகதி சனிக்கிழமை அன்று பாடசாலைகள் நடைபெறும். என கிழக்கு மாகாண ஆளுநர்  ஜயந்தலால் ரத்னசேகர  அறிவித்துள்ளதாக அவரின் ஊடக பிரிவு இன்று சனிக்கிழமை (7) வெளியிட்டுள்ளது. 

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழ் பாடசாலைகளுக்கு இந்த விசேட விடுமுறை திங்கட்கிழமை 9ம் திகதி  வழங்கியுள்ளதாகவும் அதற்கு ஈடாக, நவம்பர் 14-ஆம் திகதி சனிக்கிழமை அன்று பாடசாலைகள் நடைபெறும்.

இதேவேளை ஏனைய பாடசாலைகளான சிங்கள மற்றும் முஸ்லிம்  பாடசாலைகள் வழமைபோல நவம்பர் 9 ஆம் தேதி செயல்படும்.என ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.

Leave a comment

Comment