TamilsGuide

ராவணனாக மிரட்டியிருக்கும் யஷ்... ராமாயணா படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம்

கடந்த சில வாரங்களாக மக்களால் அதிகம் பேசப்பட்ட ஒரு படமாக இருந்தது ராமாயணா.

இந்த ராமாயணா கதையை மையப்படுத்தி எத்தனையோ படங்கள், சீரியல்கள் என வந்துவிட்டது, ஆனால் இந்த கதையை மீண்டும் மீண்டும் பார்க்க மக்கள் விரும்புவார்கள். ராமர்-ராவணன் கதை, இதில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் என பலர் நடித்துள்ளனர்.

அவரவர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் மிகவும் உண்மையாக நடித்துள்ளனர். படம் நேற்று வெளியாகிவிட்டது, ராமர் சீதாவாக நடித்த ரன்பீர் கபூர், சாய் பல்லவியை தாண்டி ராவணனாக நடித்த யஷ் நடிப்பு ரசிகர்களால் அதிகம் பாராட்டப்பட்டு வருகிறது.

சம்பளம்

படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ. 155 கோடி வசூல் வேட்டை செய்துள்ளதாம்.

இந்த பிரம்மாண்ட படத்தில் நடிக்க முதல் பாகத்திற்காக நடிகை சாய் பல்லவிக்கு ரூ. 6 கோடி வீதம் இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து ரூ. 12 கோடி சம்பளம் பெறுகிறாராம்.

அதேபோல் ராவணனாக மிரட்டியிருக்கும் யஷ் முதல் பாகத்திற்கு ரூ. 50 கோடி என இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து ரூ. 100 கோடி சம்பளம் பெறுகிறாராம்.
 

Leave a comment

Comment