நிரஞ்சன் இயக்கத்தில் பாரத் நடிப்பில் உருவாகியுள்ள 'மிஸ்டர் பாரத்' படத்தின் டிரெய்லர் வெளியானது. முழுக்க முழுக்க காமெடி பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் நகைச்சுவை காட்சிகள் மற்றும் கலகலப்பான உரையாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
நிரஞ்சன் இயக்கத்தில் பாரத் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘மிஸ்டர் பாரத்’. இப்படத்தில் சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், ஆர்.சுந்தர் ராஜன், லிங்கா உள்பட பலர் நடித்துள்ளனர்.
பேஷன் ஸ்டூடியோஸ், ஜி ஸ்குவாட், தி ரூட் நிறுவனங்கள் சார்பாக சுதன்சுந்தரம், லோகேஷ் கனகராஜ், ஜெகதீஷ் பழனிசாமி தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரணவ் முனிராஜ் இசையமைத்துள்ளார்.
கடந்த மாதம் 1-ந்தேதி வெளியாக இருந்த இப்படம் தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ‘மிஸ்டர் பாரத்’ டிசம்பர் மாதம் 11-ந்தேதி வெளியாகிறது.
இந்த நிலையில், ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் டிரெய்லர் வெளியானது. முழுக்க முழுக்க பக்கா காமெடி பின்னணியில் உருவாகியுள்ள 'மிஸ்டர் பாரத்' படத்தின் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள நகைச்சுவைக் காட்சிகளும், கலகலப்பான உரையாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


