TamilsGuide

உணவகங்களின் தரம் குறித்து QR குறியீடு மூலம் முறைப்பாடு செய்யலாம்

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் உணவுகளின் தரநிலை தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக QR குறியீட்டு முறைமையொன்றை அறிமுகப்படுத்த அச்சபையின் பொதுச் சுகாதாரத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய, இந்தத் திட்டம் தற்போது வெள்ளவத்தையிலிருந்து பம்பலப்பிட்டி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது கொழும்பு 01 முதல் 15 வரை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு மாநகர மேயர் விராய் கெலி பல்தசார் தெரிவித்துள்ளார்.

இந்தப் பகுதிக்குட்பட்ட ஒவ்வொரு உணவகத்திலும் குறித்த QR குறியீட்டைக் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், அந்த முறைமையை ஸ்கேன் செய்து அதிலுள்ள படிவத்தைப் பூர்த்தி செய்து முறைப்பாடு செய்ய முடியும்.

அது நேரடியாக சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கும் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் சென்றடையும்.

அவர்கள் அது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்றும், இதன்போது முறைப்பாடு செய்பவரின் அடையாளம் வெளிப்படுத்தப்படாது பாதுகாப்பாக இருக்கும் என்றும் கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.முறைப்பாடு செய்த பின்னர் அது தொடர்பான உணவை உணவகத்திற்குத் திரும்ப ஒப்படைக்க வேண்டாம் என்றும், அதன் கட்டணப் ரசீதை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறும் மாநகர சபை மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a comment

Comment