அக்குரணை, குடுகல பகுதியில் உள்ள வாகன உதிரிபாகங்கள் விற்பனை நிலையம் ஒன்றில் இன்று (04) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகாலை 5:00 மணியளவில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தினால், கண்டி – மாத்தளை வீதியிலான போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், வாகன சாரதிகள் சுமார் ஒரு மணிநேரம் சிரமத்திற்குள்ளாகினர்.
இருப்பினும், தற்போது தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இது குறித்து கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


