TamilsGuide

ரயில் விபத்து - பதவி விலகினார் ஸ்பெயின் போக்குவரத்து அமைச்சர்

ஸ்பெயின் நாட்டில் அதிவேக ரயில் மோதிய விபத்தில் குறைந்தது 69 பேர் உயிரிழந்து, பலர் காயமடைந்த ஆறு நாட்களுக்குப் பின் ஸ்பெயினின் போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கார் புவென்டே (Óscar Puente ) பதவி விலகியுள்ளார்.

தலைநகர் மாட்ரிட்டிற்குத் தெற்கே உள்ள உர்தா நகருக்கு அருகில் கடந்த புதன்கிழமை நிகழ்ந்த விபத்து குறித்து சாட்சியமளித்த பின்னர், அமைச்சர் ஆஸ்கார் புவென்டே (Óscar Puente ) தனது முடிவை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

கடந்த வாரம் நிகழ்ந்த இந்த ரயில் விபத்து, ஐரோப்பாவின் நவீன வரலாற்றில் மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாகும். மேலும், 2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஸ்பெயினில் நிகழ்ந்த மிக மோசமான விபத்தும் இது என கூறப்படுகின்றது.

செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற நீண்ட நாடாளுமன்ற அமர்வின் முடிவில் அமைச்சர் ஆஸ்கார் புவென்டே (Óscar Puente ) தனது முடிவை அறிவித்தார்;    


 

Leave a comment

Comment