TamilsGuide

6 வயதில் தொடங்கிய சிறுவனின் முயற்சி - 12 வயதில் உலகையே வியக்க வைத்த செயல்

12 Years old Leo Sordello-Savale London Boy to save animals: லண்டனைச் சேர்ந்த 12 வயது சிறுவன் விலங்குகளை பாதுகாக்க செய்துள்ள செயல் உலக நாடுகளையே வியக்க வைத்துள்ளது.

தெற்கு லண்டனில் கேம்பர்வெல் பகுதியைச் சேர்ந்த Leo Sordello-Savale என்ற 12 வயது சிறுவன் விலங்குகளை பாதுகாப்பதற்கு எடுத்துள்ள முயற்சி ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சிறுவன் விலங்குகள் மீது கொண்ட அன்பினால் தனது 6 வயதிலிருந்தே விலங்குகளை பாதுகாக்கும் இயக்கத்தினை தொடங்கியுள்ளார்.

கொரோனா தொற்று ஊராங்கின் போது ஆறு வயது நிரம்பிய இச்சிறுவன், விலங்குகளை பாதுகாப்பதற்காக சிந்தித்துள்ளார். இந்நிலையில் யூடியூப் மற்றும் பாட்காஸ்ட் மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரத்தினை தொடங்கியுள்ளன்.

சிறுவனின் விடாமுயற்சி உலகத்தில் பல மக்களை வியக்க வைத்ததுடன், விலங்கு தொண்டு நிறுவனம் மற்றும் காடுகள் மறுசீரமைக்கும் திட்டத்திற்காக 13 ஆயிரம் பவுண்ட் நிதி திரட்டியுள்ளார்.

அதாவது இந்திய மதிப்பில் சுமார் 12 லட்சத்திற்கு மேல் என்று கூறப்படுகின்றது. சிறுவனின் செயலைப் பாராட்டி உலகப்புகழ்பெற்ற இயற்கை ஆர்வலரான சர் டேவிட் அட்டன்பரோ தானே கடிதம் எழுதி சிறுவனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அடுத்தடுத்து இரண்டு விருதுகள்

லியோவின் செயலை இன்னும் கௌரவிக்கும் விதமாக பிரிட்டிஷ் அரசு, பிரிட்டிஷ் சிட்டிசன் இளைஞர் விருதையும், லண்டன் ஈக்கோ சாம்பியன் விருதையும் வழங்கியுள்ளது.

அதுமட்டுமின்றி 12 வயதான லியோவிற்கு, பார்ன் பிரீ என்ற சர்வதேச வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு இளநிலை தூதுவராக நியமிக்கப்பட்டி பணியாற்றி வருகின்றார்.

விலங்குகளை பாதுகாக்க சிறுவன் எடுத்த முயற்சி தற்போது உலகில் உள்ள பல சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
 

Leave a comment

Comment