TamilsGuide

அமெரிக்க இடைத் தேர்தல் - முன்கூட்டியே வாக்களித்த 5.3 கோடி மக்கள்

அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தலுக்கான வாக்களிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், இதுவரை 5.3 கோடிக்கும் அதிகமான மக்கள் முன்கூட்டியே வாக்களித்துள்ளனர்.

புளோரிடா பல்கலைக்கழகத்தின் ஆய்வுத் தரவுகளின்படி, நேற்று (01) காலை நிலவரப்படி சுமார் 5 கோடியே 31 இலட்சத்து 40 ஆயிரம் பேர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.

சுமார் 21 கோடி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது. முன்கூட்டியே வாக்களித்தவர்களில் சுமார் 2.9 கோடி பேர் நேரடியாக வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்றும், 2.3 கோடி பேர் தபால் மூலமாகவும் வாக்களித்துள்ளனர்.

இதன்படி, முன்கூட்டியே வாக்களித்தவர்களில் 1.1 கோடிக்கும் அதிகமானோர் ஜனநாயகக் கட்சியின் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் என்பதுடன், சுமார் 80 இலட்சம் பேர் குடியரசுக் கட்சியின் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தினத்திற்கு முன்னதாக இரு கட்சிகளின் வேட்பாளர்களும் ஆதரவாளர்களும் தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வரும் பின்னணியில், முன்கூட்டிய வாக்களிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment