தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நஸ்ரியா. இவர் நடிப்பில் வரும் நவம்பர் 6-ஆம் தேதி சீன் திரைப்படம் வெளியாகிறது. இப்படத்தில் முதல் முறையாக சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார்.
இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். நடிகை நஸ்ரியா சீன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு அணிந்து வந்திருந்த புடவை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிலையில், அதே புடவையில் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நஸ்ரியா பதிவிட்டுள்ளார்.


