சூர்யா மற்றும் தனுஷ் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இயக்குநர் மணிரத்னம் உருவாக்கும் இந்த பிளாக் பஸ்டர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் தனுஷ் இருவரும் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் சூர்யா மற்றும் தனுஷ் இருவரை மையமாக கொண்ட ஒரு வலுவான கதையை இயக்குநர் மணிரத்னம் உருவாக்கயுள்ளதாகவும், அதில் கதாநாயகர்களாக சூர்யா மற்றும் தனுஷ் ஆகிய இருவரையும் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்காக இருவரிடமும் இயக்குநர் மணிரத்னம் கதை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், இருநடிகர்களும் இக்கதையில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் படத்திற்கான கால்ஷீட் மற்றும் சம்பளம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அனைத்து பேச்சுவார்தைதைகளும் சுமூகமாக முடிந்தால் விரைவில் புதுப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதற்கிடையே, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய் பல்லவி நடித்து வரும் ‘இஞ்சி வெல்லம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.


