TamilsGuide

48 ஆண்டுகளாகத் தண்ணீர் குடிக்காத அமெரிக்க கோடீஸ்வரர்

அமெரிக்காவின் மற்றொரு கோடீஸ்வரரான பில் ஆக்மேன் அண்மையில் பேட்டியொன்றில், வாரன் பபெட் கடந்த 48 ஆண்டுகளாகத் தண்ணீர் குடிக்கவில்லை எனக் கூறியதாக தெரிவித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தொன்றை நினைவுகூர்ந்த ஆக்மேன், வாரன் பபெட்டுக்கு மிகவும் பிடித்த பானம் என்பதால் Cherry Coke வாங்கி வைத்திருந்ததாகக் கூறினார்.

விருந்தின்போது இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய நிலையில், ஆக்மேன் வாரன் பபெட்டுக்கு தண்ணீர் வழங்கியுள்ளார். ஆனால், அவர் தண்ணீரை ஏற்க மறுத்துள்ளார்.

இதனை அடுத்து, “நீங்கள் தண்ணீரே குடிப்பதில்லையா?” என ஆக்மேன் கேட்டபோது, “நான் தண்ணீர் குடித்து 48 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதைவிட கோக் எனக்கு மிகவும் பிடிக்கும்” என வாரன் பபெட் பதிலளித்ததாக ஆக்மேன் தெரிவித்துள்ளார்.

வாரன் பபெட் தினமும் சுமார் ஐந்து கேன் கோகோ கோலா அருந்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

2015ஆம் ஆண்டு அவர் தன்னை நகைச்சுவையாக “கால் பகுதி கோகோ கோலா” என வர்ணித்திருந்தார்.

தனது நாளாந்த கலோரி உட்கொள்ளலில் சுமார் 25 சதவீதம் கோகோ கோலா மூலம் கிடைப்பதாகவும் அவர் அப்போது தெரிவித்திருந்தார். 
 

Leave a comment

Comment