634 கோடிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... ஊழல் குறித்து சீரியல் நடிகை ஜனனி அசோக்
சினிமா
தமிழ்கத்தில் நடிகராக இருந்த விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அரசியலில் நிறைய நல்ல நல்ல மாற்றங்கள் நடந்து வருகிறது.
இன்னொரு பக்கம் பல கோடி ரூபாய் லஞ்சம், ஊழல் போன்ற விவகாரம் எல்லாம் பூதாரகமாக வெடித்து வருகிறது.
பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் இப்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாக துறையில் 2,538 உதவி பொறியாளர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நியமனத்துக்கு ரூ. 634 கோடி லஞ்சம் பெறப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் பிரபல சீரியல் நடிகை ஜனனி அசோக்கின் பெயர் அடிபட்டது.
இந்த நிலையில் இந்த ஊழல் வழக்கில் தனது பெயர் அடிபடுவதை கண்ட நடிகை ஜனனி ஒரு பெரிய அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், என்னைப் பற்றி பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை.
நான் எப்போதும் அரசியலுக்கு அப்பாற்பட்டவள், எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் தொடர்பு இல்லை. அரசியல்வாதிகளுடன் தனிப்பட்ட நட்பையும் பேணியது இல்லை. எந்த ஒரு பின்னணியும் ஆதரவும் இல்லாமல் திரைத்துரையில் நற்பெயரைப் பெற கடுமையாக உழைத்துள்ளேன்.
என்னைத் தவறாகத் தொடர்புபடுத்திப் பதிவிடப்பட்ட பதிவுகளைத் திருத்த அல்லது நீக்க வேண்டும். உண்மை முக்கியமானது, தரவுகள் முக்கியம், அதேபோல் ஒரு தனிமனிதனின் கண்ணியமும் முக்கியமானது என பதிவிட்டுள்ளார்.






















