• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை..

அமெரிக்கா- ஈரான் இடையிலான போர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. தற்போது முழு அளவில் போர் நடைபெறவில்லை. இருந்தாலும் செரிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் நாடு கடத்த வேண்டும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என ஈரானுக்கு அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது.

ஆனால், இந்த நிபந்தனையை ஈரான் ஏற்குமா? எனத் தெரியவில்லை. இதற்கிடையே ஈரான் மீது பயங்கரமான தாக்குதல் நடத்த அமெரிக்கா ஆயத்தமாகி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் புதிய தாக்குதல் நடத்தப்பட்டால் என ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக கமெனி கூறியதாக அவருடைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் "எதிரிகள் மீண்டும் ஒருமுறை ராணுவ அல்லது பயங்கரவாத தாக்குதல்களை தொடங்கினால், அத்தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நேரத்தையும் நிபந்தனைகளையும் தீர்மானிப்பவர்கள் இஸ்லாமியக் குடியரசின் ஆயுதப் படைகளும் ஈரானிய தேசமுமே ஆவர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்தவொரு வகையிலான அச்சுறுத்தலுக்கும் உடனடியாகவும், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலும், புவியியல் ரீதியாக எவ்வித கட்டுப்பாடும் இல்லாத வகையிலும் பதிலடி கொடுக்கப்படுவதை உறுதி செய்யுமாறு கமேனி தளபதிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மேலும், அமெரிக்க- இஸ்ரேல் எதிரிக்குச் சொந்தமான அனைத்து வகையான புலப்படும் மற்றும் புலப்படாத சொத்துகளையும் உள்ளடக்கும் வகையில் இலக்குப் பட்டியலை மாற்றியமைக்குமாறும் தளபதிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

Leave a Reply