உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தந்தீவு பகுதியில், வீட்டின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த மீன் தொட்டியில் தவறி விழுந்த ஒன்றரை வயதுக்குட்பட்ட பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று (ஒக்டோபர் 31) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீன் தொட்டியில் விழுந்த குழந்தை உடனடியாக கொத்தந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த குழந்தை கொத்தந்தீவு பகுதியைச் சேர்ந்த 1 வயதும் 4 மாதங்களும் நிரம்பியவராவார்.
குழந்தையின் சடலம் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


