TamilsGuide

வாட்ஸ்அப் மூலம் நிதி மோசடி - பெண்ணொருவர் கைது

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தில், வாட்ஸ்அப் குழு ஒன்றின் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் 46 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர், வாட்ஸ்அப் குழு ஒன்றின் வாயிலாக பெறுமதியான பரிசுப் பொதி ஒன்றை வழங்குவதாகக் கூறி, நபர் ஒருவரை தனது வங்கிக் கணக்கில் 1,455,000 ரூபாயைச் வைப்பிலிடுமாறு தூண்டியுள்ளார்.

இந்த மோசடி குறித்த முறைப்பாடு ஒன்றைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விசாரணைக்கு அமைவாக, வடமேல் மாகாண கணினி குற்றங்கள் புலனாய்வுப் பிரிவின் உதவியுடன் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

சந்தேக நபர் நுகேகொடை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வடமேல் மாகாண கணினி குற்றங்கள் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.
 

Leave a comment

Comment