யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட வர்த்தக வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் வசந்த சமரசிங்கவின் பங்கேற்புடன் திருநகர் வட்டார சபை உருவாக்கும் நிகழ்வு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநகர் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வில் , அப்பகுதிக்கான வட்டார சபை உருவாக்கப்பட்டது.
அதேவேளை , அப்பகுதியில் , யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார தொழிலாளிகள் பலர் வசித்து வரும் நிலையில் , மாநகர சபையின் ஆளும் கட்சியினரால் குறித்த நிகழ்வுக்கு போக கூடாது என கடுமையாக எச்சரிக்கப்பட்டதாக , மாநகர சபையின் , தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சு.கபிலன் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


