TamilsGuide

விஜயதாச ராஜபக்ஷவின் மகனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனான ரகித ராஜபக்ஷவுக்குச் சொந்தமான பல வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கு இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

குற்றச் செயலொன்றின் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் தொடர்பான சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்றுக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டமை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் கடிதத்தை ஒப்படைப்பதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவொன்று நாவல பகுதியில் அமைந்துள்ள ரகித ராஜபக்ஷவின் வீட்டிற்குச் சென்றுள்ளது.

இருப்பினும், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குறித்த அறிவித்தலை வழங்கச் சென்ற வேளையில், ரகித ராஜபக்ஷ வீட்டில் இருக்கவில்லை என அந்த ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment