TamilsGuide

மலையக மக்களின் வரலாற்றில் தடம்பதித்த தலைவருக்கு உணர்வுபூர்வ அஞ்சலி

மலையகத் தமிழ் மக்களின் உரிமைக்காகவும், தொழிலாளர் வர்க்கத்தின் முன்னேற்றத்திற்காகவும் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த மலையகத்தின் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 27ஆவது சிரார்த்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. 

இன்னிலையில் கொழும்பு பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள சௌமியமூர்த்தி தொண்டமானின் உருவச் சிலைக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளால் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

இந்தநிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், தலைவர் செந்தில் தொண்டமான், நிதிச்செயலாளரும், தவிசாளருமான மருதபாண்டி ராமேஷ்வரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர்களான கணபதி கனராஜ், அனுசியா சிவராஜா, பிரதி பொதுச்செயலாளர் செல்லமுத்து, உப தலைவர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், உறுப்பினர்கள் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஹட்டன் டிக்கோயா நகர சபை உறுப்பினர் அழகமுத்து நந்தகுமார், உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸி முக்கியஸ்தர்கள் என பலர் பங்கேற்றிருந்தனர்.

Leave a comment

Comment