TamilsGuide

காலாவதியாகும் முன் கடைசி நேரத்தில் லொட்டரிச்சீட்டுக்கு உரிமை கொண்டாடிய நபர்

Winner claims massive Canada lotto prize hours before expiration: லொட்டரிச்சீட்டு காலாவதியாகும் முன் கடைசி நேரத்தில் அதற்கு உரிமை கொண்டாடியுள்ளார் ஒருவர்.

2025ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 28ஆம் திகதி, கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள லொட்டரி நிறுவனம் ஒன்றில் லொட்டரிச்சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார் ஒருவர்.

அந்த பரிசுச்சீட்டுக்கு 40 மில்லியன் கனேடிய டொலர்கள் பரிசு விழுந்துள்ளது! 

ஆனால், நேற்று வரை, அதாவது, 2026ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் திகதி வரை, யாரும் அந்த பரிசைப் பெற வரவில்லை.

நள்ளிரவு வரை யாரும் அந்த பரிசை வாங்காவிட்டால், அந்த பரிசுச்சீட்டு காலாவதியாகிவிடும்.

ஆகவே, மக்கள் தாங்கள் வாங்கிய லொட்டரிச்சீட்டுகளை சோதித்துப்பார்க்குமாறு லொட்டரி நிறுவனம் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில், நேற்று ஒருவர் அந்த பரிசுச்சீட்டுக்கு உரிமை கோரியுள்ளார். விடயம் என்னவென்றால், 2022ஆம் ஆண்டு, இதேபோல் ஒரு சம்பவம் நடந்தது.

70 மில்லியன் டொலர்கள் மதிப்புடைய பரிசை வாங்க யாரும் வராததால், லொட்டரி நிறுவனம் அது குறித்து அறிவிப்பு வெளியிட, அந்த பரிசுச்சீட்டு தன்னுடையது என்று கூறி அதற்கு உரிமை கோர 2,700 பேர் வந்துள்ளார்கள். ஆனால், அந்த பரிசுச்சீட்டு அவர்களில் யாரிடமும் இல்லை!

ஆக, தற்போது அந்த 40 மில்லியன் டொலர்களுக்கான பரிசை உரிமை கோரியுள்ள நபர், பரிசுச்சீட்டுடன் வந்து, அது அவருடையதுதான், அதுதான் பரிசு பெற்ற லொட்டரிச்சீட்டு என்பதை லொட்டரி நிறுவனம் உறுதி செய்யும் பட்சத்தில், அந்த பரிசு அவருக்கு வழங்கப்படும்.

40 மில்லியன் கனேடிய டொலர்கள் என்பது இலங்கை மதிப்பில் 9,49,56,07,224.00 ரூபாய் ஆகும்! 

Leave a comment

Comment