ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் அமெரிக்கத் தயாரிப்பு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் இஸ்லாமிய புரட்சிப் படை (IRGC) தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே உள்ள வான்வெளியில் MQ-1 ரக ட்ரோன் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக, ஈரானின் அரசு செய்தி நிறுவனமான IRNA செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் இஸ்லாமிய புரட்சிப் படையின் (IRGC) தகவல்படி, சிரிக் (Sirik) கடற்கரைக்கு அப்பால் இந்த ட்ரோன் இடைமறிக்கப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்த MQ-1 ட்ரோனை யார் இயக்கிக் கொண்டிருந்தார்கள் என்பது குறித்த விவரங்களை அவர்கள் தெரிவிக்கவில்லை.


