Jailer 2 Bo: கடல் கடந்த சினிமா ரசிகர்களும் கொண்டாடும் ஒரு இந்திய நடிகர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினி தான்.
அவரை நேரில் காண்பதற்காகவே பல வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த மக்களும் பலர் உள்ளார்கள். தன்னை வாழ வைக்கும் தெய்வங்கள் என ரஜினியும் தனது ரசிகர்களை எப்போது பெருமையாக கொண்டாடுவார்.
கடந்த அக்டோபர் 15ம் தேதி ரஜினி நடித்த ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகி இருந்தது. தமிழ் மட்டுமில்லாது பான் இந்தியா அளவில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
நகைச்சுவை, ஆக்ஷன், சிறப்பு தோற்றத்தில் பிரபலங்கள் என எல்லாம் கலந்த கமர்சியல் திரைப்படமாக அமைந்ததால் இப்படம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
75 வயதிலும் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம்வரும் ரஜினியின் ஜெயிலர் 2 வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
தமிழகம், இந்தியா என மாஸ் கலெக்ஷன் செய்துவரும் ஜெயிலர் 2 ஓவர்சீஸில் மட்டுமே இதுவரை ரூ. 265 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்துள்ளதாம். இந்த வசூல் ஆல்டைம் ரெக்கார்ட்டாக பார்க்கப்படுகிறது.


